Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் & ஹெச் வினோத் படம் தொடங்குவது எப்போது? அப்போ கமல் படம்?

தனுஷ் & ஹெச் வினோத் படம் தொடங்குவது எப்போது? அப்போ கமல் படம்?
, திங்கள், 5 ஜூன் 2023 (08:05 IST)
சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அவரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என மூன்று படங்களை இயக்கினார்.

துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகி வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு வினோத் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல் படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக உள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங்கே மொத்தம் மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என சொல்லப்படும் நிலையில், அதை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் தனுஷ் படத்தை தொடங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. அதற்குள் தனுஷ் தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிடுவார் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சலார் படத்துக்கு இருக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு… ஆனாலும் பிடிவாதமாக இருக்கும் தயாரிப்பாளர்!