Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

Advertiesment
விஜய்

vinoth

, திங்கள், 9 ஜூன் 2025 (08:02 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கைப்பற்றுவதில் நடந்த போட்டியில் விஜய்யின் நண்பரான தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த உரிமையை அவர் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?