Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
சைன் சாம் டாக்கோ  விஜய் பீஸ்ட்

Mahendran

, வெள்ளி, 6 ஜூன் 2025 (10:20 IST)
விஜய் நடித்த பீஸ்ட் உள்பட சில தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் சைன் சாம் டாக்கோ  சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவருடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 நடிகர் சைன் சாம் டாக்கோ  தனது தாய், தந்தை, சகோதரர் மற்றும் ஓட்டுநர் உடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அந்த கார் நேற்று திடீரென முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் சைன் சாம் டாக்கோ   தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய், சகோதரர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சைன் சாம் டாக்கோவுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிகிறது.
 
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் சைன் சாம் டாக்கோ  நடித்துள்ளார் என்பதும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?