ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு இன்னும் இத்தனைக் கோடி சம்பள பாக்கி உள்ளதா?

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (11:39 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரிப் பாடல் கடந்த வாரம் ரிலீஸானது. இந்த பாடல் இணையத்தில் நல்ல கவனம் பெற்று இதுவரை 5.3 கோடிப் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக விஜய் சுமார் 235 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாகவும், அதில் 150 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மீதமுள்ள 85 கோடி ரூபாய் பணத்தை வியாபாரம் முடிந்ததும் கொடுக்கலாம் எனத் தயாரிப்பு தரப்பு நினைத்திருந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை இன்னும் விற்பனை ஆகாததால் அந்த மீதத் தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படம் போட்டக் காசை எடுத்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்வேன்… ஆண்ட்ரியா உறுதி!

உழைப்பை எளிமைப்படுத்தும் தளமாக ஏ ஐ உள்ளது… கீர்த்தி சுரேஷுக்கு கருத்துக்கு எதிராகப் பேசிய விஜய் ஆண்டனி!

மனோரமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஜோசியம்! அப்ப ஓடிப் போனவர்தான் அவர் கணவர்

கஞ்சா வழக்கில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சுப வீரபாண்டியன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments