சினிமாவை விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார் விஜய். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகளுக்கு மட்டும் தான் போட்டி. ஒன்று திமுக இன்னொன்று தவெக என அவர் போகும் அனைத்து மேடைகளிலும் இதைத்தான் பேசி வருகிறார். இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தான் போட்டியே இருக்கிறது என்று அடிக்கடி கூறி வருகிறார் விஜய்.
அதற்கு ஏற்ப ஒவ்வொரு கூட்டத்திலும் திமுகவை சாடி ஏராளமான கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார். தைரியமாக ஸ்டாலினை எதிர்த்தும் ஆவேசமாக பேசி வருகிறார் விஜய். கண்டிப்பாக அடுத்த வருடம் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார் விஜய். கரூர் கோர சம்பவம் அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் செல்லாத விஜய் இப்போதுதான் அடுத்த பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் திரையுலகிலும் இரு கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாக இருக்கின்றது. அதாவது தயாரிப்பு சங்க கவுன்சில் தேர்தலும் வர இருக்கின்றதாம். அதில் ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழ்குமரன் ஒரு அணியில் தலைவராக நிற்கிறாராம்.
இன்னொரு அணியில் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் நிற்கிறாராம். இப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக நிற்கப் போகும் அணியில் விஜயின் தாய் மாமா சேவியர் பிரிட்டோ துணைத்தலைவராக போட்டியில் நிற்கப் போகிறாராம். இதிலிருந்து திரையுலகிலும் தவெக திமுக என்ற வகையில் போட்டி வந்து விட்டதாக சொல்கிறார்கள். விஜயை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்தவர்தான் சேவியர் பிரிட்டோ.
செயலாளராக சௌந்தர் நிற்கிறாராம். விஜய்யையும் அஜித்தையும் வைத்து ராஜாவின் பார்வையிலே படத்தை எடுத்தவர் தான் சௌந்தர். போற போக்கை பார்த்தால் விஜயையே பிரச்சாரத்திற்கு அழைத்து விடுவார்கள் போல என்று கூறி வருகிறார்கள்.