Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லைகர் படத்தின் படுதோல்வியால் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் நிறுத்தப்பட்டதா?

லைகர் படத்தின் படுதோல்வியால் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் நிறுத்தப்பட்டதா?
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:39 IST)
விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளியான லைகர் படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பல கோடிக் கணக்கில் நஷ்டமடையக் கூடும் என சொல்லப்படுகிறது.

இந்த தோல்வியால் லைகர் கூட்டணியான விஜய் தேவரகொண்டா- பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாக இருந்த JGM என்ற படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஷூரன்ஸ் முடிந்த பைக்கில் ஊர் சுற்றுகிறாரா அஜித்? இணையத்தில் கிளம்பிய சர்ச்சை!