Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்ஷூரன்ஸ் முடிந்த பைக்கில் ஊர் சுற்றுகிறாரா அஜித்? இணையத்தில் கிளம்பிய சர்ச்சை!

இன்ஷூரன்ஸ் முடிந்த பைக்கில் ஊர் சுற்றுகிறாரா அஜித்? இணையத்தில் கிளம்பிய சர்ச்சை!
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:25 IST)
நடிகர் அஜித் தற்போது வட இந்தியாவில் பைக் தன் குழுவினருடன் பைக் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

அதன் பின்னர் அஜித் 61 படத்தில் சில நாட்கள் நடித்த அவர் இப்போது லடாக் லாங் பைக் ரைடு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அஜித் தன் பைக் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவ, அதில் உள்ள வண்டி எண்ணை எடுத்து சிலர் இணையத்தில் தேடி அந்த பைக்கின் இன்ஷூரன்ஸ் நவம்பர் 2020 ஆம் ஆண்டே முடிந்துவிட்டதாகவும், அவர் இன்ஷூரன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி வருவதாகவும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அது சம்மந்தமாக சில ஸ்க்ரீன் ஷாட்களையும் இணையத்தில் பரப்பி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட நயன்தாரா பட இயக்குனர்!