Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படம் தோல்வி.... பிரபல நடிகர் எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Shooting
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:49 IST)
பூரி ஜெகந் நாத் இயக்கத்தில், விஜய்தேவரகொண்டா நடிப்பில், சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம்  லைகர்தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில்  நேற்று வெளியானது.

மிகப்பெரிய  அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.சினிமா விமர்சகர்களும் இப்படடத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.

நேற்றுதான் இப்படம் ரிலீஸான நிலையில் கர் நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மற்ற இடங்களில் இப்படத்திற்கு பார்வையாளர் அதிகளவில் வரவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா இப்படம் சரியாகப் போகவில்லை என்பதல், சோகத்தில் இருந்ததாகவும், அவர் இரவு முழுவதும் மது அருந்திக்கொண்டு, அறையைப் பூட்டியதாகவும், அவரது நெருக்கமான  பாலிவுட் இயக்குனர், கரண் ஜோகரின் எண்ணையும் பிளாக் செய்ததாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், லைகர் படம் ரிலீஸான முதன்  நாளில் உலகளவில் ரூ.33.12 கோடி ரூபாய் வசூலீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவடையும் நிலையில் கவினின் ‘டாடா’: ரிலீஸ் எப்போது?