Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லைகர் படத்தை விமர்சித்த நடிகையை வறுத்தெடுக்கும் விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள்!

லைகர் படத்தை விமர்சித்த நடிகையை வறுத்தெடுக்கும் விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள்!
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:22 IST)
லைகர் படத்தினை விமர்சித்த நடிகை மற்றும் தொகுப்பாளினி அனுசுயாவை தேவரகொண்டா ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் ரிலீஸான பின்னர் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படம் பற்றி நடிகையும் தொகுப்பாளினியுமான அனுசுயா சமூகவலைதளத்தில் கிண்டலடித்து விமர்சனம் செய்ய அவரை விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர். பலரும் அவரை ‘ஆண்டி’ என்று அழைத்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து தன்னை யாராவது ஆண்டி என அழைத்தால் போலீஸில் புகார் செய்வேன் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இன்னமும் கோப்ரா டப்பிங் பணிகள் முடியவில்லை…” மேடையிலேயே உண்மையை உடைத்த விக்ரம்!