Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கிள் இல்ல டபுள்ஸ்… புதிய ட்ரண்ட்டை உருவாக்கும் விஜய் ஆண்டனி!

Advertiesment
சிவகார்த்திகேயன்

vinoth

, வியாழன், 24 ஜூலை 2025 (09:56 IST)
அருவி படத்தின் இமாலய வெற்றி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.  அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படம் அதிகளவில் பிரச்சார தன்மை கொண்டதாகவும் உள்ளீடற்ற ஆன்மீக வாழ்வியல் கதையாக இருந்ததாலும் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டது.

இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் ஒரு தேக்க நிலை உருவானது. இந்நிலையில் இப்போது அவர் எந்த விளம்பரங்களும் இல்லாமல் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து அவரே தயாரித்தும் உள்ளார். இந்த படம் ஒரு ஹெய்ஸ்ட் பின்னணியில் நடக்கும் படம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரியளவில் கவனம் ஈர்த்தது.

இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களை இன்று ஒரே நாளில் ரிலீஸ் செய்யவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வழக்கமாக படக்குழுவினர் ஒவ்வொரு பாடலாக ரிலீஸ் செய்வதுதான் வாடிக்கை. ஆனால் அந்த ட்ரண்ட்டை உடைத்து விஜய் ஆண்டனி ஒரே நாளில் இரண்டு பாடல்களை வெளியிடுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Breaking Bad & Better call saul சீரிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வின்ஸ் கில்லிகன் &ஆப்பிள் டிவியின் புதிய தொடர்!