2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வெளியாகி பிரபலமான சீரிஸ் பிரேக்கிங் பேட். அதன் பின்னர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் அந்த சீரிஸ் பிரபலமானது. தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்த தொடரை வின்ஸ் கில்லிகன் எழுதி உருவாக்கினார். இதுவரை உருவான சீரிஸ்களிலேயே பிரபலமான சீரிஸாக பிரேக்கிங் பேட் உள்ளது.
இதையடுத்து இந்த தொடரில் இடம்பெற்ற சால் குட்மேன் என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு அவர் Better call saul” என்ற ஒரு சீரிஸை உருவாக்கினார். அந்த சீரிஸும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அவர் ஆப்பிள் டிவியுடன் இணைந்து புதிய தொடர் ஒன்றை உருவாக்கவுள்ளார்.
இந்த தொடரில் Better call saul”-ல் கதாநாயகியாக நடித்திருந்த ரியா சீஹார்ன் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த சீரிஸின் அறிவிப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.