கடந்த சில மாதங்களாக குறைந்த இறக்கத்துடனும், அதிக ஏற்றத்துடனும் விற்பனையாகி வந்த தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.1000 விலை குறைந்துள்ளது நகை பிரியர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பு, தேவை உள்ளிட்டவற்றை பொருத்து நாள்தோறும் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வேகமாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை தொட்டது. நேற்று ஒரு நாளில் ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் 22 கேரட் தங்கம் இன்று ரூ.1000 விலை குறைந்துள்ளது.
சென்னை நிலவரப்படி, இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.125 விலை குறைந்து ரூ.9,255க்கு விற்பனையாகி வருகிறது. 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.1000 விலை குறைந்து ஒரு சவரன் ரூ.74,040 ஆக விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.136 குறைந்து ஒரு கிராம் ரூ.10,096 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1088 குறைந்து ரூ.80,768க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் ஒரு கிலோவிற்கு ரூ.1000 என நேற்று அதிகரித்திருந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.1000 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000க்கும் விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K