பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திபெத் பிராந்தியத்தை சீனாவின் ஒரு பகுதியாக மாற்றிவரும் சீன அரசு தற்போது திபேத்திலிருந்து உருவாகி இந்தியா வரும் பிரம்மப்புத்திரா ஆற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. திபேத், இந்தியா, வங்கதேசம் என மூன்று நாடுகள் வழியே பாய்ந்து செல்லும் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு இந்தியா, வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அதை கண்டுகொள்ளாத சீனா ரூ.14 லட்சம் கோடி செலவில் அணைக்கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த அணைக்கு மொடுடோ நீர்மின் நிலையம் என சீனா பெயர் சூட்டியுள்ளது.
இந்த புதிய அணை கட்டப்படுவது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியோகுன், “இந்த புதிய அணையால் பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் பிரம்மப்புத்திரா ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இது உதவியே செய்யும். இதுகுறித்து இருநாடுகளுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் நிச்சயமாக இந்தியா, வங்கதேசத்துடன் பகிர்ந்துக் கொள்ளப்படும். ஆனால் அணைக்கட்டுவது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K