இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த டீசரில் ஒரு பதின் பருவ பெண்ணின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் சார்ந்த காட்சிகள் பலவற்றைக் காட்டியிருந்தனர். அதில் அந்த பெண் புகைப்பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால் கண்டனங்கள் எழுந்தன.
இந்த படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, டீசர் இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து படம் சென்சாருக்கு சென்றபோது அங்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ரிவைசிங் கமிட்டிக்கு சென்று UA 16+ சான்றிதழ் பெற்று நேற்று ரிலீசானது.
நேற்று ரிலீஸான படம் பெண்ணியவாதிகள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த படம் பெரியளவில் ரசிகர்களைத் திரையரங்குக்குள் இழுக்கவில்லை. படம் முதல் நாளில் 12 லட்ச ரூபாய் அளவில் இந்தியாவில் வசூலித்துள்ளது. அதில் 11 லட்ச ரூபாய் தமிழ்நாட்டில் வசூலித்துள்ளது.