பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்!
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் திலீப்குமார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திலீப்குமார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
									
										
			        							
								
																	
	 
	கடந்த 1944 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான திலீப்குமார் 1998 ஆம் ஆண்டு வரை நடித்தார் என்பதும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அவர் திரையுலகில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு பாலிவுட் திரை உலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் முக்கிய அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது