நடிகர் நஸ்ருதீன் ஷா உடல் நல பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளை வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது.
இந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நஸ்ருதீன் ஷா. இவர் தி வெட்னஸ் டே( தமிழில் கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன்). ஹேராம், கிரிஸ் உள்ளிட்ட பல பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் நஸ்ருதீன் ஷா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவருக்கு நடந்த சோதனைகளில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.