Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் பாடல்கள் குறித்து சிலருக்கு மாறுபட்ட கருத்து இருக்கு… ஆனா தியேட்டர்ல அது நடக்கும் – வெங்கட் பிரபு நம்பிக்கை!

கோட் பாடல்கள் குறித்து சிலருக்கு மாறுபட்ட கருத்து இருக்கு… ஆனா தியேட்டர்ல அது நடக்கும் – வெங்கட் பிரபு நம்பிக்கை!

vinoth

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (08:16 IST)
இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்று பாடல்களுமே ரசிகர்களைப் பெரிய அளவில் ஏமாற்றியுள்ளன. வழக்கமாக விஜய் படங்களில் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்டாகும். ஆனால் ஏனோ கோட் பட பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கேக் கூட பிடிக்கவில்லை.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “கோட் பாடல்கள் குறித்து சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கிறது. ஆனால் தியேட்டரில் எல்லோரும் எழுந்து டான்ஸ் ஆடுவார்கள். ஸ்பார்க் பாடல் வந்தபோது கூட நெகட்டிவ்வாக விமர்சனம் வந்தது. ஆனால் இப்போது எல்லோருக்கும் அந்த பாடல் பிடித்திருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரகனி நாயகனாகநடிக்கும்புதிய படம்!