திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், புதிய ரேஷன் கார்டு மனு விண்ணப்பித்தல், செல் நம்பர் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்வதற்காக மேற்கொள்வதற்காக பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி, குன்னத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி தனது கணவர் மற்றும் குழந்தையோடு புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு மனுதாக்கல் செய்வதற்காக கடந்த ஆறு மாதமாக அலுவலகத்திற்கு வந்து செல்வதாகவும் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.
இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து வந்தோம் நேற்று மின்தடை உள்ளது நாளை வாருங்கள் என்று சொன்னார்கள். அதுபடி இன்று காலை 9 மணியளவில் வந்தோம் 12:30 மணி வரை அலுவலகம் பூட்டி கிடக்கிறது இது போல் அடிக்கடி பூட்டிவிட்டு சென்று விடுகின்றனர் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோன்று சின்னு பட்டியைச் சேர்ந்த அபிநயா தனது குழந்தையோடு ரேஷன் கார்டில் செல் நம்பர் மாற்றுவதற்காக கடந்த ஒரு வாரமாக அலைக்கழிப்பதாக கூறி அவரும் தர்ணாவில் ஈடுபட்டார்.
கல்லூரி மாணவர்கள் இருவர் தங்களது பெயரின் எழுத்துப் பிழை மாற்றத்திற்காக வந்தோம் என்றும் அவர்களும் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறினர் எனவே வட்ட வழங்கல் அதிகாரி தங்கேஸ்வரியையும் அலுவலக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர் கை குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது