Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்.. ராகுல் காந்தி அவமதிக்கப்பட்டாரா?

Advertiesment
செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்.. ராகுல் காந்தி அவமதிக்கப்பட்டாரா?

Mahendran

, வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (13:03 IST)
டெல்லி செங்கோட்டையில் இன்று சுதந்திர தின கொண்டாட்டம் நடந்த நிலையில் ராகுல் காந்தி அவமதிக்கப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்ற போது 11வது முறை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் இரண்டாவது வரிசையில் அவர் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டது அவமானம் என்றும், ஒரு நாள் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்பதை பாஜக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது என்றும் ஆனால் பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ராகுல் காந்தி தரப்பில் இருந்தோ காங்கிரஸ் தரப்பில் இருந்தோ இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் வேளாண் கடன் ரூ.13.36 கோடி தள்ளுபடி.! சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!