விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (17:16 IST)
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய "கோட்" திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அவருக்கு கிடைக்க இருந்த அடுத்த பட வாய்ப்புகள் கைநழுவி போயுள்ளன. இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
"கோட்" படத்திற்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும், சிம்பு நடிப்பில் "மாநாடு 2" உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், "கோட்" படத்தின் வெற்றி வாய்ப்பு குறைந்ததால், சூழ்நிலை மாறியுள்ளது.
 
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா  இயக்கத்தில் உருவாகும் "பராசக்தி" மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் "மதராஸி" ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், வெங்கட் பிரபுவுக்கு அடுத்த வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், தற்போது அவர் "குட் நைட்" திரைப்பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வெங்கட் பிரபுவுடனான சிவகார்த்திகேயனின் திட்டம் தள்ளிப்போயுள்ளது.
 
அதேபோல், சிம்புவும் அடுத்தடுத்து ஐந்து படங்களில் கமிட் ஆகியுள்ளதால், "மாநாடு 2" திரைப்படம் என்பது இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குச் சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனால், தற்போது வெங்கட் பிரபு எந்தவிதமான பட வாய்ப்புகளும் இல்லாமல் இருப்பது திரையுலகினர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments