Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலிஸ் தேதியை நீக்கி புதிய போஸ்டர் வெளியிட்ட வீரமே வாகை சூடும் படக்குழு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (14:58 IST)
விஷால் நடிப்பில் உருவாகும் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாகிறது.

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய வாரம் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’, பொங்கலுக்கு அஜீத்தின் வலிமை மற்றும் பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தற்போது பின்வாங்கி விட்டது என்றும் அதேபோல் ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. எனவே பொங்கலுக்கு இப்போதைக்கு வலிமை மட்டுமே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. எனவே ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இந்த விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பொங்கலுக்கு ரிலீஸாகாமல் ஜனவரி 26 ஆம் தேதியே வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். அதையடுத்து இன்று அந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகிறது. அதில் ரிலீஸ் தேதி இல்லை. மேலும் விரைவில் ரிலிஸ் என்றுதான் சொல்லப்படுகிறது. இதனால் ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகும் புஷ்பா 2… படக்குழு அறிவிப்பு!

விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

திரையரங்குகளில் கண்டுகொள்ளப் படாத ‘பிளடி பெக்கர்’ ஓடிடி ரிலீஸாவது கவனம் பெறுமா?

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 முதல் பார்வை.. ஷூட்டிங்குக்குத் தயாரான படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments