Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விண்ணிலும் இளையராஜா இசைதான்! – விண்வெளி செல்லும் பாடல்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (12:08 IST)
தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்றை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் விண்வெளிக்கு பல செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் சமீப காலங்களில் மாணவர்கள் தயாரிக்கும் சிறிய அளவிலான செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து சாதனை படைத்த மாணவர்கள் அமைப்பு புதிய குட்டி செயற்கைக் கோளை தயாரித்துள்ளனர். அதில் இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளையராஜா இசையமைத்த தேச ஒற்றுமைக்கான இந்தி பாடலை இஸ்ரோ உதவியுடன் விண்வெளிக்கு அனுப்ப உள்ளனர். இந்த பாடலை தமிழிலும் வெளியிட இளையராஜா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இளையராஜா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments