Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதிகா எனக்கு அம்மாவே இல்லை... நான் அப்படி கூப்பிடவும் மாட்டேன் - வரலக்ஷ்மி சரத்குமார்!

Advertiesment
ராதிகா எனக்கு அம்மாவே இல்லை... நான் அப்படி கூப்பிடவும் மாட்டேன் - வரலக்ஷ்மி சரத்குமார்!
, திங்கள், 2 மார்ச் 2020 (15:21 IST)
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார். 
 
நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு வாரிசு நடிகையாக இருக்கும் என்னையும் பட வாய்ப்பிற்காக  தயாரிப்பாளர்களுடன் மற்றும் இயக்குநர்கள் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூறினார் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த வரலக்ஷ்மி, நிறைய பேர் எப்படி நீங்கள் ராதிகாவை ஆன்ட்டி என்று கூப்பிடுவீர்கள் என்று கேட்கிறார்கள் என்று கூறி அதற்கான விளக்கத்தை கொடுத்தார். அதாவது, ராதிகா ஒன்னும் என்னுடைய தாய் கிடையாது. அவங்க என் அப்பாவின் இரண்டாவது மனைவி அவ்வளவுதான். தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். நம் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் மட்டும் மட்டும் தான். எனவே ராதிகா என்னுடைய அம்மா கிடையாது. அவங்க எனக்கு ஆண்டி தான்... நான் அப்டித்தான் கூப்பிடுவேன். வேலை வெட்டி இல்லாத சில பேர் தன் இப்படி பேசி குழப்புவாங்க.. வேற வேலை எதாவது இருந்தால் இதெல்லாம் ஏன் கேட்கப்போறாங்க என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடி சரவெடி போலீஸ் சூர்யவன்ஷி! – காப் யூனிவர்ஸ் ட்ரெய்லர்!