Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“வட சென்னை” நான் எடுத்த தவறான முடிவு; குமுறும் ஆண்ட்ரியா

Advertiesment
“வட சென்னை” நான் எடுத்த தவறான முடிவு; குமுறும் ஆண்ட்ரியா

Arun Prasath

, சனி, 29 பிப்ரவரி 2020 (17:51 IST)
வட சென்னை திரைப்படத்தில் நடித்தது தான் எடுத்த தவறான முடிவு என ஆண்ட்ரியா வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தனுஷ், ஆண்ட்ரியா, இயக்குனர் அமீர், உள்ளிட்ட பலரும் நடித்து வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் “வட சென்னை”. இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்ததற்காக பலரும் ஆண்ட்ரியாவை பாராட்டியுள்ளனர். ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரம் ரொமான்ஸ் காட்சிகளில் அதிக நெருக்கத்துடன் நடித்திருப்பார்.
webdunia

இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ஆண்ட்ரியா கூறியது பின்வருமாறு

“வட சென்னை திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்த பிறகு, அதே போல், ஒத்த கதாப்பாத்திரங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. அவை ஒன்று போலவே இருந்தது. அப்போது தான் தவறான முடிவை எடுத்து நடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன், அந்த காட்சிகளால் எனது எதிர்காலமே பாதித்துவிட்டது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “அந்த காட்சிகளால் சம்பளத்தை தற்போது குறைத்துக்கொண்டு நடிக்கிறேன்” எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாஸ்டர்’’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் முக்கிய அப்டேட் !