பிரபல நடிகையும் விஜயகுமாரின் மகளுமான வனிதா விஜயகுமார் நடித்து இயக்கியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் வனிதா, அவரின் முன்னாள் கணவர்களில் ஒருவரான ராபர்ட், கிரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வெளியாகி விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வெளியாகி விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது. நடுத்தர வயது சேர்ந்த ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்வதா, அல்லது திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதா என்ற குழப்பத்திற்கான விடை தான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. டிரைலரில் பல காட்சிகள் கீழ்த்தரமான ரசணையோடு ஆபாசமாக உருவாக்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள வனிதா “என் திரைப்படத்தைப் பாருங்கள் முதலில். அதன் பிறகு என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். என் படத்தில் உள்ள எல்லா விஷயங்களும் அசலானவை. அவற்றில் எதாவது ஒன்று காப்பி என்று நிரூபித்தால் கூட நான் சினிமாவை விட்டே விலகத் தயார். இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.