ஜூலை நான்காம் தேதி வெளியான இயக்குனர் ராமின் பறந்து போ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பறந்து போ, இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி, நகைச்சுவை அம்சம் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தற்காலப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதிலிருந்து வெளியேறுவது குறித்த படமாக உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வழக்கமாக ராம் படங்களுக்குக் கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு பெரிய வசூல் கிடைத்தது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்த படத்தின் வசூல் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் இந்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பறந்து போ மாதிரியான ஒரு சிறு பட்ஜெட் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாகப் பார்க்கப்படுகிறது.