மிஸ் புதுச்சேரி பட்டம் பெற்ற மாடல் அழகி சன் ரேச்சல் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கருப்பு நிறத்தில் இருந்தாலும் மாடலிங் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் என்பதும், இந்திய சினிமாவிலும், மாடலிங் துறையிலும் பிரபலமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோல் நிறத்தின் மீதான மோகத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் என்றும், குறிப்பாக கருப்பு நிறத்தை கொண்டவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து வெளிப்படையாக பேசியவர் என்றும் அவர் அறியப்படுகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மிஸ் புதுச்சேரி பட்டத்தை வென்றிருந்த சன் ரேச்சல், சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, நேற்று அவர் தனது தந்தையின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு சமீபத்தில் நடந்த திருமணம் மற்றும் நிதி நிலைமை காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.