வணங்கான் படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:48 IST)
பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார்.

இப்போது இயக்குனரும் நடிகருமான மிஷ்கின், வணங்கான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தை சில ஆண்டுகளுக்கு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. படத்தில் அவர் வாய் பேசமுடியாத காது கேளாத நபராக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சூர்யா நடிக்கும் போது இதே கதாபாத்திரத்தைதான் பாலா உருவாக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments