ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ராஜஸ்தான் ஊழல் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அமாலாக்கத்துறையினர் லஞ்சம் வாங்கும் போது ராஜஸ்தான் ஊழல் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக ED எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, எம்பி., ஜெகத்ரட்சகன் வீடு அலுவலங்களில் சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதேபோல் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படு வருகிறது.
மேலும், சீட்டு கம்பெனி மோசடி வ்அழக்கில் சொத்துக்களை முடக்காமல் இருக்க இருவரும் ரூ.15 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.