ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி தள்ளுபடி செய்தது
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இன்றைய விசாரணைக்கு பின் நவம்பர் 6ஆம் தேதிக்கு இந்த மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 6 வரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சராக இருக்கும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று சட்டவல்லுனர்கள் கூறி வரும் நிலையில் தமிழக அரசு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்துள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன