திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடத்தில் அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்எல்ஏ சி. மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகரும் தற்போதைய பொள்ளாச்சி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஷ். முன்னிலை வகித்தார். அதிமுக பொதுக்கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-
சிறையில் இருந்து கொண்டே அமைச்சராக இருக்கும் ஒரே அமைச்சர் செந்தில் பாலாஜி தான் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்த கரூர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அன்று அதிமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக கூறி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்று எம்எல்ஏவாகி மந்திரியானார்.
அதன் பிறகு இன்று செந்தில் பாலாஜி தற்போது ஸ்டாலின் கொடுத்த வழக்கில் சிறையில் இருக்கிறார் அவர் வாய் திறந்தால் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகியோர் 30,ஆயிரம் கோடி ஊழல் செய்து பணத்தை செந்தில் பாலாஜி மூலம் பதுக்கி வைத்திருக்கும் இடத்தை வெளியிட்டுருவார்.
அதனால் ஸ்டாலின் பயந்து கொண்டு அவருக்கு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். இது உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒன்று என பேசினார்.
அதன் பிறகு தற்போது மு க ஸ்டாலின் அவர்களுக்கு காய்ச்சல் வந்துள்ளது அது விஷக்காச்சல் அது பயத்தினால் வந்த காய்ச்சல் எனப் பேசினார்.
தமிழகத்தில் எங்கு கிரவல் மண் எடுத்தாலும் திமுக காரர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 500 ரூபாய் கொடுத்து விட வேண்டும். மேலும் சினிமா துறையில் ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய் உதயநிதி ஸ்டாலின் சம்பாதித்து வருகிறார்.
அவருடைய ரெட் ஜென் சினிமா கம்பெனிக்கு பட தயாரிப்பாளர்கள் விற்பனை செய்யவில்லை என்றால் அந்தப் படம் ஒடாது தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் அவர்களது கட்டுப்பாட்டில் நடத்தி வருகின்றனர்.
அப்படித்தான் விஜய் நடித்த லியோ படம் ரெட்ஜென்ட் மூவிஸ்க்கு தராததால் பல எதிர்ப்புகளை நடிகர் விஜய்க்கு திமுகவினர் கொடுத்து வந்தனர். ஆனால் விஜய்யின் அதிர்ஷ்டம் படம் வெற்றிகரமாக ஓடிவிட்டது.
மேலும் திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு, என அனைத்திலும் விலை ஏற்றத்தை உயர்த்தி உள்ளனர் என்று கூறினார்