Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவின் அடுத்த படத்தில் இணைகிறாரா வைகைப்புயல்? செமயா இருக்குமே!

சிம்புவின் அடுத்த படத்தில் இணைகிறாரா வைகைப்புயல்? செமயா இருக்குமே!
, திங்கள், 21 மார்ச் 2022 (18:02 IST)
சிம்பு அடுத்த நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிக்கை வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிம்புவும் வடிவேலுவும் கோயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சூடுபிடித்த தலைவன் இருக்கின்றான்…கமல் எடுத்த திடீர் முடிவு!