Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான அப்டேட்!

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?  வெளியான அப்டேட்!
, வியாழன், 17 மார்ச் 2022 (09:34 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் திரைப்படம் ஜூலை மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பாலா இயக்கும் படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் சுர்யா கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையடுத்து வாடிவாசல் படம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரைவாக படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு படத்தை ரிலிஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ சொல்றது எல்லாம் சிம்புவுக்குப் புரியாது… அனிதா சம்பத்தின் அடுத்த சர்ச்சை!