வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

vinoth
வியாழன், 27 நவம்பர் 2025 (08:20 IST)
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்தின் கதைக்களம் பற்றி வெளியாகியுள்ள தகவலின் படி ‘எம் ஜி ஆர் ரசிகர் ஒருவர் தன் பேரன் ராமுவோடு வாழ்ந்து வருகிறார். தன் பேரனுக்கு எம் ஜி ஆரோடு ஏதோ தொடர்பு உள்ளதாக அவர் நினைக்கிறார். அந்த இளைஞன் கவலையில்லாத வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு இளைஞனாக வாழ்கிறான். காவல்துறையில் பணியாற்றும் அவனால் அவன் தாத்தா ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ள ராமுவிடம் நடக்கும் ஒரு மாற்றமும் அதன் பின்னான திருப்பங்களும்தான் கதை. இந்த படம் 80 மற்றும் 90 களில் வெளியான மசாலாப் படங்களை போல இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் டிசம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது டிசம்பர் 12 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது தனிப்பாடல் ‘ALAPPIKU UMMAK’ என்ற பாடலை இன்று படக்குழு ரிலீஸ் செய்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments