ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிகையர் திலகம் மற்றும் சாணிக்காயிதம் மற்றும் ரகுதாத்தா போன்ற படங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
நடிகையர் திலகம் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அளிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் பேபி ஜான் படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருந்த ரிவால்வர் ரீட்டா திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி நாளை ரிலீஸாகவுள்ளது. இந்த படம் பற்றி பேசியுள்ள கீர்த்தி “ரிவால்வர் ரீட்டா ஒரு Dark காமெடி படம்தான். காமெடி ஆக்ஷன் படம்தான். சீரியஸான ஆக்ஷன் இருக்காது. அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.