நடிகர் உதயநிதி இந்த தேர்தலில் திமுகவினரால் முன்னிறுத்தப்பட்டு சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இப்போது இன்றோடு தேர்தல் முடிய உள்ள நிலையில் இனி அவர் தன் திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.
இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்ததால் இப்போது தொடங்க உள்ளது. ஏப்ரல் இறுதியில் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.