Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.176 கோடி சொத்துக்களை அரசியலில் இழந்துவிட்டால் – கமல்ஹாசன் உருக்கம்

Advertiesment
ரூ.176 கோடி சொத்துக்களை அரசியலில் இழந்துவிட்டால் – கமல்ஹாசன் உருக்கம்
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (22:23 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சார செய்து வந்த நிலையில் நேற்றுடன் இப்பிரசாரமும் ஓய்ந்தது.

இந்நிலையில் முதன்முதலாக சட்டசபைத் தேர்தலை நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது கட்சி எதிர்கொள்ள உள்ளது, அவர் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நேற்று தனது இறுதிப் பிரச்சாரத்தின்போது, அவர் மக்களிடம் உருக்கமான முறையில் பேசினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில்,என்னிடம் இருக்கும் 176 கோடி சொத்துக்களையும் அரசியலில் இழந்துவிட்டால் என்ன செய்வாய் என்கிறார்கள் ஏற்கனவே நான் வாழ்ந்த என்‌ வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டு 1200 சதுர அடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதுவும் போனால் இன்னும் எளிமையாக வாழ பழகிக் கொள்வேன் எனத்தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்