Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் திரிஷா!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் திரிஷா!

vinoth

, புதன், 17 ஜூலை 2024 (15:41 IST)
அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா பாலிவுட் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவர், குழந்தைகளுடன் தளபதி விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா.. வைரல் புகைப்படங்கள்..!