அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.
அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு இப்போது மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து கிளம்பி ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு அஸர்பைஜானில் அஜித் மற்றும் த்ரிஷாவை சந்தித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் வெங்கட்பிரபு இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பதாகவும் அதற்காகதான் அவர் அஜித் மற்றும் த்ரிஷாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.