Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது அறிவிப்பு!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2025 (11:10 IST)
ஹாலிவுட்டில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் டாம் க்ரூஸ். தொடக்கத்தில் அனைத்து விதமானப் படங்களிலும் நடித்து வந்த டாம் க்ரூஸ் தற்போது ஆக்‌ஷன் படங்களில் மட்டும் அதிகளவில் நடித்து வருகிறார்.

டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை ‘மிஷன் இம்பாசிபிள்’. 1996ல் மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது.  அனைத்து பாகங்களுமே ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு புல் மீல்ஸ் விருந்தாக அமைந்தது. சமீபத்தில் வெளியான கடைசி பாகத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சில்லிட வைக்கும் அளவுக்கு அமைந்தன. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக அவர் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவுக்கு அளித்தப் பங்களிப்புக்காக டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் க்ரூஸுடன் டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகா இரண்டாம் பாகத்தில் அவர்தான் ஹீரோ… மேடையில் அறிவித்த துல்கர் சல்மான்!

கிடப்பில் போடப்பட்டதா அமீர்கான் –லோகேஷ் படம்?

முதல் நாளில் கலக்கியதா சிவகார்த்திகேயனின் மதராஸி?... இந்திய வசூல் எவ்வளவு?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. படப்பிடிப்பு எப்போது?

கருப்பு நிற கௌனில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments