Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளை விட அதிக TRP… புஷ்பா 2 படம் படைத்த சாதனை!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (11:00 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. படம் திரையரங்குகள் மூலமாக 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இதில் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே படம் ரிலீஸாகி ஓடிடியிலும் கலக்கியது.

இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி வரலாற்றிலும் ஒரு பெரிய சாதனையை புஷ்பா 2 இந்தி வெர்ஷன் படைத்துள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புஷ்பா 2 டி ஆர் பி யில் 5.1 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது 5.4 கோடி பேர் இந்த படத்தைப் பார்த்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளுக்கே டி ஆர் பி புள்ளிகள் 3.9 என்ற அளவில்தான் இருக்கும் என்ற நிலையில் புஷ்பா 2 வின் இந்த சாதனையை வியப்பாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு… நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

நேரில் பார்த்த மனிதர்களை வைத்துதான் தலைவன் தலைவி படத்தை எழுதினேன்… பாண்டிராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments