சீனா மீது அமெரிக்கா விதித்த அதிகப்படியான வரிகள் காரணமாக தற்போது பதிலடியாக ஹாலிவுட் படங்களின் மீது கை வைத்துள்ளது சீனா.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் மௌனம் காத்த நிலையில் சீனா, அமெரிக்காவுக்கு எதிராக வெகுண்டெழுந்து எதிர் வரியை விதித்தது. இதனால் கடுப்பான அமெரிக்கா, மற்ற நாடுகளுக்கு 90 நாட்களுக்கு வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சீனாவுக்கு மட்டும் வரியை 145 சதவீதமாக கூட்டியது.
சீனா - அமெரிக்கா இடையேயான இந்த வர்த்தக போரின் அடுத்த பதிலடி நடவடிக்கையாக ஹாலிவுட் படங்களில் கை வைத்துள்ளது சீனா. அமெரிக்க ஹாலிவுட் படங்களுக்கு மிகப்பெரும் சந்தையாக சீனா, இந்தியா நாடுகள் இருந்து வரும் நிலையில், ஹாலிவுட் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.
அதன்படி, சீனாவில் வெளியாகும் ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையை சீனா குறைக்க உள்ளது. இது பன்னாட்டு பார்வையாளர்களை மனதில் வைத்து பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. பல படங்கள் ஏப்ரல், மே மாதங்களை குறிவைத்து ரிலீஸை வைத்துள்ள நிலையில் அதிர்ச்சியில் உறைந்துள்ள பட தயாரிப்பு நிறுவனங்கள்.
Edit by Prasanth.K