Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

Advertiesment
Mission Impossible

Prasanth Karthick

, செவ்வாய், 20 மே 2025 (20:05 IST)

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிஷன் இம்பாசிபிள் திரைப்பட வரிசையில் Mission Impossible Final Reckoning வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

 

டாம் க்ரூஸுக்கு உலகம் முழுவதுமே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களில் உலக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் பல விதமான வில்லன் கும்பல்களை எதிர்கொண்டு வெற்றிக் கண்டு வந்தவர் முதல்முறையாக ஏஐ வில்லன் ஒன்றை எதிர்கொள்கிறார். முந்தைய பாகமான Mission Impossible Death Reckoning-ல் உலகை கட்டுப்படுத்த துடிக்கும் எண்டிட்டி என்ற ஏஐ அறிமுகமாகிறது. அது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறது, தனக்கு எதிரானவர்களை லோக்கல் ரவுடிகள், மாஃபியாக்களை பயன்படுத்தி தீர்த்துக் கட்டுகிறது. ஒட்டு மொத்த உலகை அழித்து புதிய உலகை உருவாக்க நினைக்கிறது.

 

இதை தெரிந்துக் கொண்ட இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸின் ஏஜெண்ட் ஈதன் ஹண்ட் அதை தடுக்க நினைக்கிறார். முதல்முதலில் இந்த ஏஐ ஒரு ரஷ்ய நீர்மூழ்கி கப்பலில் செயல்பட்டதையும், அதன் சோர்ஸ் கோட் அந்த கப்பலில் இருப்பதையும் ஈதன் ஹண்ட் அறிகிறார். அந்த கப்பலை அந்த ஏஐ ஏவுகணையால் தாக்கி கடலுக்கு அடியில் வீழ்த்தியிருக்கிறது. அந்த நீர்மூழ்கியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈதன் ஹண்ட் ஈடுபட்டிருக்கும்போதே, எண்டிட்டி உலக நாடுகளின் அணு ஆயுதங்களை வைரஸ் மூலமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

 

ஈதன் ஹண்ட் கடலுக்குள் சென்று அந்த சோர்ஸ் கோடை எடுத்தாரா? எண்டிட்டியின் உலக அழிவு திட்டத்தை தடுத்தாரா? என்பதை பரபரப்பான ஆக்‌ஷன் படமாக தந்திருக்கிறார்கள். மிஷன் இம்பாசிபிளின் முந்தைய திரைப்படங்களின் ஏராளமான ரெபரென்ஸ் இதில் வருவதால் அவற்றை சின்ன சின்ன காட்சிகளாக ஆங்காங்கே காட்டுகிறார்கள். ஆனாலும் முந்தைய படங்களை பார்க்காதவர்களுக்கு இந்த படம் உடனடியாக புரிவதில் சிக்கல் இருக்கலாம். 

 

அதை தாண்டி டாம் க்ரூஸின் அசர வைக்கும் டூப் இல்லாத ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை கட்டிப்போட தவறவில்லை. 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!