Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் இஷ்டத்திற்கு டைட்டில் வைக்க முடியாது: மத்திய அரசின் உத்தரவால் திரையுலகினர் அதிர்ச்சி

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (20:17 IST)
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர். நேற்று ரிலீஸான ஒரு படத்திற்கு கூட 'கேம் ஓவர்' என்ற ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியர்களிலுக்கு பிராந்திய மொழிகளில் தலைப்பு மற்றும் நடிகர்களின் பெயரை போட வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் இனிமேல் திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு டைட்டில் வைக்க முடியாது என்பதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த மும்மொழி கொள்கையால் ஒருசில மாநில மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அவர்களை திருப்தி செய்யவே மத்திய அரசு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments