Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன் டிவிக்கு டாட்டா பைய் சொல்லிட்டு இந்த பிரபல தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா?

சன் டிவிக்கு டாட்டா பைய் சொல்லிட்டு இந்த பிரபல தொலைக்காட்சிக்கு  மாறிவிட்டாரா ராதிகா?
, சனி, 15 ஜூன் 2019 (11:38 IST)
தமிழகத்தில் எத்தனை புதிய தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும்,  பழமைவாய்ந்த தொலைக்காட்சியாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது சன் தொலைக்காட்சி.  இந்த வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும்தான் காரணம். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.
 
இதில் 90ஸ் காலகட்டங்களில் கொடிகட்டி பந்த நடிகர் நடிகைகள் தங்கள் வயதான நேரத்தில் தன் நடிப்பை தொடர சிறந்த அரங்கமாக நினைப்பது சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்க துவங்க குடும்ப ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுவார்கள். அப்படித்தான் நடிகை ராதிகா வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கி ரசிகர்கள் மனதி புது இடத்தை தக்கவைத்து கொண்டவர், அதனை தொடர்ந்து `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம் எடுத்தார். 
 
ஆனால், சமீபநாட்களாக ராதிகா சந்தரகுமாரி சீரியலை விட்டு விளக்கியுள்ளதாகவும் அவரது இடத்திற்கு பிரபல நடிகை விஜி நடிக்கவுள்ளதாகவும் நடிகை ராதிகா தெரிவித்திருந்தார். மேலும் சரத்குமார் தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

webdunia

 
இந்த நிலையில் இந்த சேனல் வேறு ஒரு சீரியலை ஒளிபரப்பரப்போகிறதாம் இதனை அறிந்து நடிகை ராதிகா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளராம். அதாவது, ராதிகா சன் தொலைக்காட்சியில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழுக்கு மாறவுள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிட்டில் சமீராவுடன் கடற்கரையில் கியூட் போட்டோஷூட் நடத்திய சமீரா ரெட்டி!