Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல் வேண்டுமா ? சினிமாவை விடு – உதய்க்கு ஸ்டாலின் வைத்த செக் !

அரசியல் வேண்டுமா ? சினிமாவை விடு – உதய்க்கு ஸ்டாலின் வைத்த செக் !
, வெள்ளி, 14 ஜூன் 2019 (11:24 IST)
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதய்நிதி ஸ்டாலின் கடந்த மக்களவைத் தேர்தலில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மக்களவை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனால் மக்களவைத் தேர்தல் வெற்றியில் உதயநிதிக்கும் மிகப்பெரிய பங்குண்டு என திமுகக் காரர்கள் சொல்லி வருகிறார்கள். இதனால் அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். வீட்டுக்குள்ளும் ஸ்டாலினுக்கு அழுத்தம அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

அதனால் கடுப்பான ஸ்டாலின் அரசியலில் ஆர்வம் இருந்தால் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் களத்தில் இறங்கு எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலினின் இந்த செக்கால் உதயநிதி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்து வருகிறாராம். சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் நடித்த எந்தப்படமும் சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு முறை ஏமாற்றிய காதலன்- சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !