வெளியானது ஸ்பைடர்மேன் தமிழ் ட்ரெய்லர் – ரசிகர்கள் கொண்டாட்டம்

சனி, 15 ஜூன் 2019 (16:43 IST)
நீண்ட நாட்களாக சூப்பர் ஹீரோ ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்பைடர்மேன் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியானது.

மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் முக்கியமான சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன். முதன்முதலில் ஆஸ்கர் விருது வாங்கிய சூப்பர்ஹீரோ படம் ஸ்பைடர்மேன்தான். 2001 முதல் சோனி நிறுவனமே ஸ்பைடர்மேன் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. தற்போது வெளியாகவிருக்கும் ஸ்பைடர்மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம் திரைப்படமானது சோனி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் கூட்டு தயாரிப்பில் உருவானது.

மார்வெல் திரைப்படங்களில் கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகமெங்கும் பல பில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இந்தியாவில் மட்டுமே முதல் நாள் வசூல் மட்டுமே 53 கோடி ரூபாய். உலக அளவில் அதிக வசூல செய்த படங்களில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அவதார் உள்ளது. எண்ட் கேம் க்ளைமேக்ஸில் அயர்ன் மேன் என்றழைக்கப்படும் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். இந்த க்ளைமேக்ஸை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறியழுதார்கள். நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது.

பீட்டர் பார்க்கர் பள்ளியில் படிக்கும் இளம் வயது பையன். அவனுடைய பள்ளியில் அவனை ஐரோப்பாவுக்கு சுற்றுலா அழைத்து செல்கின்றனர். அங்கு வித்தியாசமான அமானுஷ்ய எதிரிகள் தோன்றுகின்றனர். பீட்டர் பார்க்கர் ஸ்பைடர் மேனாக மாறி அவர்களை எப்படி எதிர் கொள்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை சுருக்கம். சென்ற பாகத்தை போல் இல்லாமல் இந்த பாகத்தில் டோனி ஸ்டார்க் செய்து கொடுத்த Iron Spider உடை அவனுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லரில் அயர்ன் மேன் குறித்து வரும் வசனங்கள் நெஞ்சம் கணக்க செய்கிறது. இந்த உலகத்தின் அடுத்த அயன் மேன் யார்? என்ற கேள்விக்கு விடையாக ஸ்பைடர்மேன் இருப்பானா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வரும் ஜூலை 5ம் தேதி ஸ்பைடர்மேன் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாக்யராஜிற்கு ஆதரவு தந்த கமல் - வீடியோ!