இரசிகர்கள் வாரா வாரம் வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் என்னென்ன படங்கள் ரிலீசாகின்றன என்று பார்ப்பதை போலவே தற்போது வெள்ளிக் கிழமை ஆனதும் ஓடிடியில் என்ன படங்கள் ரிலீஸாகின்றன என்றும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
அந்த அளவுக்கு ஓடிடிகள் சினிமாப் பார்வையாளர்களைக் கவரத் தொடங்கிவிட்டன. இதனால் வாராவாரம் அவர்கள் படங்கள் ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரண்டு தமிழ்ப் படங்கள் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளன. சித்தார்த், சரத்குமார், தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் ஸ்ரீகணேஷ் இயக்கிய 3BHK திரைப்படம் சிம்ப்ளி சவுத் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய தளங்களில் ரிலீஸாகிறது. மற்றொரு படமான கலியுகம் டெண்ட் கொட்டா தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. கட்ஸ் படம் டெண்ட்கொட்டா தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.