கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது திரையரங்குகள் மூடப்பட்டன. அதன் பின்னர் எண்ணிக்கைக் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சில மாநிலங்களில் திரையரங்குகளை 50 சதவீதம் இருக்கைகளோடு இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் கேரளாவில் தொற்று எண்ணிக்கை குறையாததை அடுத்து அங்கு திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் பெருவாரியான படங்கள் ஓடிடியில் ரிலிஸாகின. இந்நிலையில் இப்போது எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.