Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்ய்க்கும் அவங்க அம்மாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை! இயக்குனர் எஸ் ஏ சி தகவல்!

Advertiesment
விஜய்ய்க்கும் அவங்க அம்மாவுக்கும் எந்த பிரச்சனையும்  இல்லை! இயக்குனர் எஸ் ஏ சி தகவல்!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:20 IST)
விஜய்க்கும் அவர் அம்மாவுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை என இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று அவரின் 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரின் சக கலைஞர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் உழைப்பும் முக்கியக் காரணம்.

ஆரம்ப காலங்களில் விஜய்யின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், அவரை வைத்து படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். அதே போல விஜய்க்கு மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. விஜய் எஸ் ஏ சியிடம் சமீபகாலமாக பேசுவது கூட இல்லை என்று சொல்லப்பட்டது. இதை எஸ் ஏ சியே அவர் அளித்த நேர்காணல்களில் ஒத்துக்கொண்டார்.
இந்நிலையில் இப்போது விஜய் தனது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்தது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அதையடுத்து எஸ் ஏ சி நடத்தி வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார். ஆனாலும் விஜய் சமாதானம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக எஸ் ஏ சி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘ வணக்கம்…. என்னுடைய குடும்பத்தைப் பற்றி கேட்கும் போது தவறான கருத்து ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நானும் எனது மனைவியும் விஜய் வீட்டிற்கு வெளியே காரில் காத்திருந்ததாகவும், அவர் அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னதாகவும், மேலும் நாங்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. அது தவறான செய்தி. விஜய்க்கும் அவரது அம்மாவுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அண்ணாத்த’ தீபாவளி ரிலீஸ் உறுதி: வேண்டுமென்றே வதந்தி பரப்பு யூடியூப் சேனல்கள்